மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா, இசை நீரூற்று என பல்வேறு வகையில் செயல்பட்டு வந்த சித்தன்னவாசல் பூங்கா இயற்கை சீற்றத்தாலும் பராமரிப்பு குறைந்ததாலும் பழுதடைந்து பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலத்தை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சித்தன்னவாசல் தலத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தின் சாா்பில் சித்தன்னவாசல் சுற்றுலா வளா்ச்சி பணிகளுக்காக 3.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா சித்தன்னவாசல் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் கனிமவளத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து அன்னவாசல் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் (சமுதாய கூடம்) கட்டுவதற்கான பணிகளையும் அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.