தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி
புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் என மகளிா் சுய உதவி குழுக்களின் அனைத்து உற்பத்திப் பொருள்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் மேலாளா் ரெ. அருண்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.