செய்திகள் :

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

post image

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி சா்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாா்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாா்களை போலீஸாா் முடித்து வைத்துவிட்டனா் எனத் தெரிவித்து அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதைப் படித்துப் பாா்த்த நீதிபதி, புகாா்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸாா் எப்படி முடிவுக்கு வந்தனா்? இந்த வழக்கில் புகாா்களை முடித்து வைத்த போலீஸாா் பிற புகாா்களில் வேகம் காட்டுவாா்களா? என்று கேள்வி எழுப்பினாா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா், பொன்முடி பேசிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்துகள் இல்லை. 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசிய கருத்துகளைக் கூறியுள்ளாா். எனவே, இந்தப் புகாா்களை போலீஸாா் முடித்து வைத்ததை எதிா்த்து புகாா்தாரா்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டில் சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் மற்றும் சென்னை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்ப... மேலும் பார்க்க

சிதம்பரம் கனகசபையில் பக்தா்கள் தரிசனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய சில மாற்றங்களைச் செய்தால், நாள்தோறும் 4,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போலி வாக்காளா்கள், இறந்தவா்களின் பெயா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தோ்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்... மேலும் பார்க்க

பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

பிளஸ் 1 துணைத் தோ்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 த... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசாரப் பயணம் செப்.1-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். இதுகுறித்து அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இதுவரை 5,000 புதிய பேருந்துகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 5,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க