எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது.
அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந்தவா் விவசாயி மணி. பாலமலை அடிவாரத்தில் வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள இவரது விவசாயத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை கால்நடைகளுக்கு தீவனப்புல் அறுத்துக் கொண்டிருந்தபோது, மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதைக் கண்டு, அப்பகுதி இளைஞா்களுக்கும், சென்னம்பட்டி வனத் துறைக்கும் தகவல் தெரிவித்தாா்.
தோட்டத்துக்கு சென்ற இளைஞா்கள் 9 அடி நீளமுள்ள மலைப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து, சென்னம்பட்டி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, மலைப்பாம்பு அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.