மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?
சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு மிக சொற்ப அளவில் குறைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 20-ஆம் தேதி பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையான நிலையில், 21-ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.73,840-க்கும், 22- ஆம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் , தங்கம் விலை சனிக்கிழமை அதிரடியாக உயர்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.130-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2000 உயா்ந்து ரூ.1,30,000- க்கும் விற்பனையாகிறது.