செய்திகள் :

`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்துறை நடவடிக்கை

post image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தெப்பக்காடு பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது.

ஆசியாவின் பழைமை வாய்ந்த யானைகள் முகாம்களில் ஒன்றாக விளங்கி வரும் இந்த முகாமில் தாயை இழந்த நிலையில், மீட்கப்பட்ட யானைகள் மற்றும் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்திய யானைகளை பழங்குடி பாகன்களைக் கொண்டு கும்கிகளாகப் பராமரித்து வருகின்றனர்.

meta AI
2 யானைகளுக்கிடையே மோதல்

பராமரிப்பு காரணங்ளுக்காக தெப்பக்காடு மட்டுமின்றி பாம்பேக்ஸ், ஈட்டி மரம் அபயரண்யம் போன்ற பகுதிகளிலும் யானைகளை பராமரித்து வருகின்றனர்.

அபயரண்யத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சுமங்கலா என்ற பெண் யானைக்கும், உடைந்த கொம்பன் என்று அழைக்கப்படும் சங்கர் யானைக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு யானைகளுக்கு இடையே மோதல் முற்றியதில் சங்கர் யானையை முட்டித்தள்ளி கீழே வீழ்த்தி சுமங்கலா யானை தாக்கியிருக்கிறது.

யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்க முயன்ற சங்கர் யானையின் பாகன் விக்கி, சுமங்கலா யானையை விரட்ட முயன்றுள்ளார்.

ஆனால், ஆக்ரோஷமாக சங்கர் யானையை சுமங்கலா தாக்கிய நிலையில், அருகில் கிடந்த கத்தியை எடுத்து சுமங்கலா யானையின் பின்னங்காலில் வெட்டியிருக்கிறார் பாகன் விக்கி.

அங்கிருந்து அலறியடித்து ஓடியிருக்கிறது சுமங்கலா யானை. வெட்டுக் காயத்துடன் காலில் ரத்தம் வடிவதைக் கண்ட சுமங்கலா யானையின் பாகன் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.

பின்னணி குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தினர், "பாகன் கத்தியால் வெட்டியதில் பின்னங்காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் மூலம் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகன் விக்கி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

World's Ugliest Dog: `உலகின் அவலட்சணமான நாய்' போட்டியில் ரூ.4.3 லட்சம் பரிசு - ஏன் தெரியுமா?

கலிபோர்னியாவின் சான்டா ரோசாவில் உள்ள `சோனோமா கவுண்டி' கண்காட்சியில் கடந்த வாரம் நடைபெற்ற உலகின் மிக அவலட்சணமான நாய்கள் போட்டியில், இரண்டு வயது மதிக்கதக்க முடி இல்லாத பிரெஞ்சு புல்டாக் பெடுனியா என்ற நா... மேலும் பார்க்க

Nilgiris: அரிசி, பருப்பு எல்லாமே காலி, இரவோடு இரவாக ரேஷன் கடையை முடித்த யானைகள்

நீலகிரி மலையில் இயற்கையான வாழிடச் சூழல்களை இழந்துத் தவிக்கும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் விளை நிலங்களிலும் நடமாடி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் முறையற்ற வக... மேலும் பார்க்க

கோவை: 25 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுக்காக காடுகளில் இரு... மேலும் பார்க்க

``உலகின் மிகச்சிறிய பாம்பு; 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது..'' - சூழலியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாக இருக்குமாம், அதன் முழு வளர்ச்... மேலும் பார்க்க