செய்திகள் :

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

post image

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராட்சசன் படத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

தொடர்ந்து, நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருக்கும் மோகன்தாஸ் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் தாமதமாகி வருகிறது.

தற்போது, ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் ஆர்யன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் முடிவடைந்தது. பிரவீன் இயக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகும் முன்பே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

It has been announced that actor Vishnu Vishal's film Aryan will be released in October.

ஹாரி கேன் ஹாட்ரிக்: அபார வெற்றியுடன் (6-0) சீசனை தொடங்கிய பயர்ன் மியூனிக்!

ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கோப்பையின் முதல் போட்டியில் பயர்ன் மியூனிக் அணி 6-0 என வென்றது. நடப்பு சாம்பியனான பயர்ன் மியூனிக் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்பட... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸ் முதல்முறையாக கோப்பையை வெல்லும்..! துணை கேப்டன் பேட்டி!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என அதன் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் கூறியுள்ளார். புதிய தலைமைப் பயிற்சியாளா் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12... மேலும் பார்க்க

நீலம் தயாரிப்பின் பெயரில் போலி ஆடிஷன்கள்!

பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், இதனால் நடிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்து அணி நட்பு ரீதியான ஆட்டத்துக்கு கேரளத்திற்கு வருவது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

நடிகர் விஷாலின் 35-ஆவது படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார். மத கஜ ராஜா படத்திற்குப் பிறகு அஞ்சலி விஷால் உடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.திருச்செந்தூர் கோயில், ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில், முத... மேலும் பார்க்க