சினிமாவும் சாப்பாடும் தான் இங்கு பிரதானம்! - சென்னையின் பொன்னான நினைவலை #Chennai...
``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் கதை
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஸ்ரக் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் ராவணனை தங்கள் முன்னோராக கருதி வழிபடுகின்றனர்.
அதுபோலவே மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர் நிம்பா டைட்டியா (Nandur Nimba Daitya) என்ற கிராமமும் தனித்துவமான நம்பிக்கையால் பிரபலமாக உள்ளது.

ஹனுமான் ஆலயம் இல்லாத கிராமம்
மகாராஷ்டிரா, அகமத்நகர் மாவட்டத்தின் பாதர்டி தாலுகாவில் உள்ள இந்தக் கிராமத்தில், மக்கள் ஹனுமான் வழிபாட்டை முற்றிலும் தவிர்க்கின்றனர். கிராமத்தில் ஒரு ஹனுமான் ஆலயம்கூட இல்லை என கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கும் ‘மாருதி’ அல்லது ‘ஹனுமான்’ என்று பெயர் வைக்கப்படுவதில்லை.
மேலும் மாருதி கார்கள் (Maruti cars) வைக்கத்திருக்க கூட கிராமத்தில் விரும்பப்படுவதில்லை. காரணம், மாருதி என்பது ஹனுமானின் இன்னொரு பெயராகும்.
மாருதி கார் சம்பவம்
2000-ஆம் ஆண்டுகளில், அக்கிராமத்தில் பிரபலமாக இருந்த மருத்துவர் டாக்டர் சுபாஷ் தேஷ்முக், ஒரு புதிய Maruti 800 கார் வாங்கினார்.
அதே நாளிலிருந்து அவரது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் குறைந்துவிட்டனர் எனவும் இதற்கு காரணம் அந்த கார் தான் என்றும் அவர் நம்பி, Maruti 800 காரை விற்று, Tata Sumo வாங்கினார். அப்போது நோயாளிகள் மீண்டும் அவரை அணுகத் தொடங்கியதாக கூறுகின்றனர்.

தொடரும் நம்பிக்கை
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஸ்ரக் என்ற கிராமத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் திகம்பர் காடே கூறுகையில் “நாங்கள் அரக்கனை வழிபடுகிறோம் என்பதற்காக எந்தவிதமான கொடூர சடங்குகளும் நடத்தப்படுவதில்லை. விலங்கு பலி எதுவும் இல்லை. பலர் எங்களை மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்று சொல்வார்கள், ஆனால் இது எங்கள் தலைமுறைகளாக தொடரும் நம்பிக்கை” என்கிறார்.