‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ...
பாரதிராஜா நடிக்கும் புலவர் படத்தின் முதல் பார்வை வெளியீடு!
பிரபல இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் “புலவர்” திரைப்படத்தின் முதல்பார்வை விடியோ-வை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.
16 வயதினிலே, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான அவர், சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார்.
குரங்கு பொம்மை, மகாராஜா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Glad to launch the first look of #Pulavar presented by Padmabhushan Nambi Narayanan featuring Iyakkunar Imayam #Bharathiraja , directed by #Murukaiya , produced by @sameerbr@supertalkies#whitenightsentertainment@Mrtmusicoffpic.twitter.com/b5WM4SFp2U
— A.R.Rahman (@arrahman) August 23, 2025
இந்நிலையில், இயக்குநர் முருகைய்யா இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் “புலவர்” திரைப்படத்தின் முதல்பார்வை விடியோ-வை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இன்று (ஆக.23) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
புதுமையான காட்சியமைப்பில் வெளியாகியுள்ள இந்த முதல்பார்வை விடியோவானது இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க: 18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!