இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு
திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்திக்க வேண்டுமென சபரிராஜன் தெரிவித்துள்ளார். இதை நம்பி, கோடாங்கிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்களான நவீன், சந்திரபிரகாஷ், டேனியல் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அந்த இளைஞரைத் தாக்கியதுடன், அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.92 ஆயிரத்தை ஜி பே மூலம் பறித்துக் கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞர் போலீஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து, பணத்தைப் பறித்த சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்களான நவீன், சந்திரபிரகாஷ், டேனியல் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செல்போன் ஆஃப் மூலம் பழகியதை நம்பிச் சென்ற இளைஞரிடம் இருந்து ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.