செய்திகள் :

எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்பு!

post image

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அனில் அம்பானி தரப்பு நிராகரித்துள்ளது.

இதனிடையே, எஸ்பிஐ புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடைபெற்றது.

வங்கி முறைகேடு தொடர்பாக எஸ்பிஐ தரப்பிடமிருந்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து. கடந்த வியாழக்கிழமை அனில் அம்பானி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் லிமிடட்.(ஆர்காம்) நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானியின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் குழுக்கள் சோதனை நடத்தின.

இந்த நிலையில், இது குறித்து அனில் அம்பானி தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) புகார் அளித்துள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத பிரிவுகளின் இயக்குநராக அனில் அம்பானி இருந்தவர். அப்படியிருக்கையில், அனில் அம்பானி மீது தனிப்பட்ட முறையில் குறிவைத்து எஸ்பிஐயால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI's declaration challenged in judicial forum, Anil Ambani denies all allegations.

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும... மேலும் பார்க்க

நக்ஸல் ஆதரவாளா் என விமா்சனம்: அமித் ஷாவுக்கு சுதா்சன் ரெட்டி பதிலடி

தன்னை நக்ஸல் ஆதரவாளா் என விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதா்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ள... மேலும் பார்க்க

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். கோ... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலை... மேலும் பார்க்க