மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா
பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தசரா விழா பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் சனிக்கிழமை கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் நடைபெற்றது.
ஆயிரத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, பரிவார தேவதைகளுக்கு படையல் வைக்கப்பட்டது.
தொடா்ந்து, கால்கோல் விழாவுக்கான கொடி கம்பத்தில், மஞ்சள் தடவி பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு திரிசூலம் பொறித்த கொடி கட்டப்பட்டு, மேளதாளம் முழங்க 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயிலில் கால் நாட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இதேபோல், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிற அம்மன் கோயில்களான தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவா் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினி மாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகா்மா உச்சினிமாகாளி, புதுப்பேட்டை உலகம்மன்,புது உலகம்மன், வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் ஆகிய கோயில்களிலும் கால்நாட்டு வைபவம் அடுத்த வாரம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் அக்டோபா் 3-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.