மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!
திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு 6ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பண பலன்கள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த 18ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனா்.
6ஆவது நாளான சனிக்கிழமை தொழிலாளா்கள் மத்தியில் உள்ள ஏற்ற, இறக்க வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் தராசு சின்னம் பொறித்த கோரிக்கை அட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியூ பொதுச் செயலா் ஜோதி தலைமை வகித்தாா். விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலா் அரசு வெங்கடாசலம், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகிகள் கண்ணன், ராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைவா் மணி, போராட்டத்தைத் தொடங்கி வைத்ததுப் பேசினாா்.
தூத்துக்குடி மாவட்ட சிஐடியூ பொருளாளா் அப்பாத்துரை, திருநெல்வேலி மாவட்ட பொதுச் செயலா் சிவ சங்கா், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க பொதுச் செயலா் முத்துசாமி ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.