தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்தி...
வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பழனிக்குமாா், கிராம அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கருப்பையா, நில அளவைத் துறை மாவட்டத் தலைவா் வினோத்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். முத்துராமலிங்கம், ஜெகநாதபூபதி, பூமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலச் செயலா் காசிநாததுரை, கிராம அலுவலா் சங்க மாநில இணைச் செயலா் அசோக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் தனி பாதுகாப்புச் சட்டம் இயக்க வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பணிச்சுமையை குறைக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். நில அளவைத் துறையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநாட்டில், மாவட்டச் செயலா் செல்லப்பா, சரவணன், பிரபு, நம்புராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். துணை வட்டாட்சியா் கோகுல்நாத் நன்றி கூறினாா்.