''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்...
முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலையில் சின்னமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
முதுகுளத்தூா்- சிக்கல் சாலையில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற சின்ன மாடுகள் போட்டியில் 8 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் மதுரை வெள்ளியங்குன்றம் பாலாவின் மாடுகள் முதலிடத்தையும், பூலாங்கால் சிங்கத்தமிழன் மாடுகள் இரண்டாமிடத்தையும், மேலச்செல்வனூா் வீரக்குடி முருகய்யனாா் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.
இதேபோல, சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடுகள் பந்தயத்தில் 12 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் ஏ. புனவாசல் முத்துக்காவியா மாடுகள் முதலிடத்தையும், கிடாக்குளம் சேதுகோடாங்கி மாடுகள் இரண்டாமிடத்தையும், ஆப்பனூா் உக்கிரபாண்டியன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாட்டு வண்டி உரிமையாளா்கள், சாரதிகளுக்கு பரிசுகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை முதுகுளத்தூா், கடலாடி, சிக்கல் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு ரசித்தனா்.