செய்திகள் :

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

post image

கட்டிய மனைவியை ரூ. 36 லட்சம் வரதட்சிணைக்காக தாய் உடன் சேர்ந்து அடித்து உதைத்து, தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு, நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த, இறந்த பெண்ணின் மகன் (சுமார் ஆறு வயது) கூறுகையில், "அவர்கள் என் அம்மா மீது ஏதோ ஒன்றை ஊற்றி, அவரை அறைந்து, லைட்டரை பயன்படுத்தி தீ வைத்தனர்" என்றார்.

கிரேட்டர் நொய்டாவில் சிர்சா கிராமப்பகுதியைச் சேர்ந்த விபின் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. இந்தக் குடும்பத்தில் நிக்கியின் சகோதரியும் மருமகளாக உள்ளார். விபினின் சகோதரனை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், நிக்கி குடும்பத்தினர் ரூ. 36 லட்சம் வரதட்சிணை தரவில்லை என்றுக் கூறி கடந்த வியாழக்க்கிழமை விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாகத் தாக்கி, நிக்கி மீது ஆசிட் ஊற்றி தீவைத்துக் கொன்றுள்ளனர்.

இந்த கொடூரமான சம்பவத்தின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விடியோவில், கணவனும் மாமியாரும் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்கின்றனர். இதை நிக்கியின் சகோதரி காஞ்சன் விடியோ எடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நிக்கியின் சகோதரி காஞ்சன், ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு தனது தங்கையை கணவர் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறினார்.

கிரேட்டர் நொய்டா கூடுதல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (ADCP) சுதிர் குமார் கூறுகையில், "ஆகஸ்ட் 21 அன்று, ஃபோர்டிஸ் மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது, தீக்காயங்களுடன் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. போலீசார் உடனடியாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்றனர், ஆனால் மருத்துவமனையை அடைவதற்குள் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பலினார்” என்றார்.

”அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் செய்தனர். பாதிக்கப்பட்டவரின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், நிக்கியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கஸ்னா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.

"விபின் கைது செய்யப்பட்டுள்ளார், மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று அதிகாரி கூறினார்.

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். மக்களவை எ... மேலும் பார்க்க

உ.பி.யில் போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறியப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இணைந்து நடத்திய சோதனையில் இந்த சம்பவம் வெளிச்சத்த... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுல், தேஜஸ்வி இருசக்கர வாகனப் பேரணி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் இருசக்கர வாகன... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரான வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!

ஒடிசாவில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகல் இந்... மேலும் பார்க்க

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 7ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க