செய்திகள் :

Andhra: 'ரூ.7000 டு ரூ.6755 கோடி சொத்து' - பணக்கார முதல்வரான சந்திரபாபு நாயுடு; ஏழை முதல்வர் யார்?

post image

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்றைக்கு மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முக்கிய தூணாக இருக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள் பெரிய அளவில் எந்த வித தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. அரசியலுக்கு வந்துவிட்டாலே அதில் தான் கவனம் செலுத்துவார்கள்.

ஆனால் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிலிருந்து மாறுபட்டு அரசியல் மற்றும் தொழில் என இரண்டையும் ஒரே நேரத்தில் வெற்றிரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

சந்திர பாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் முதல் பணக்கார முதல்வராக இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கந்துவிற்கு ரூ.163 கோடி அளவுக்குச் சொத்து இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு ரூ.63 கோடி சொத்தும், டெல்லியில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான சொத்தும் இருக்கிறது. ஆனால் கேரளாவில் முதல்வராக இருக்கும் பினராய் விஜயனுக்கு வெறும் ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்து மட்டுமே இருக்கிறது.

நாட்டின் ஏழை முதல்வர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு ரூ.15.38 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவிற்கு ரூ.55.24 லட்சம் மதிப்புள்ள சொத்து இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒரு சில முதல்வர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து முதல்வர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். அனைத்து முதல்வர்களையும் சேர்த்து ரூ.1600 கோடி சொத்து இருக்கிறது. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள முதல்வர்கள் சொத்து பட்டியலில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

ரூ.7000 எப்படி ரூ.6755 கோடியாக அதிகரித்தது

1992ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தின் போது பால்பண்ணை தொழிலில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டபோது அதனைச் சரியாக சந்திரபாபு நாயுடு பயன்படுத்திக்கொண்டார். சந்திரபாபு நாயுடு ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தை ரூ.7000 முதலீட்டில் தொடங்கினார்.

1994ம் ஆண்டு பொதுமக்களிடம் தனது கம்பெனிக்கு நிதி திரட்டுவதற்காக ஐ.பி.ஒ வெளியிட்டார். இதில் ரூ.6.5 கோடி திரட்டி தனது பால்பண்ணை வர்த்தகத்தை சந்திரபாபு நாயுடு விரிவுபடுத்தினார்.

ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் கடந்த 30 ஆண்டில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 17 மாநிலங்களில் 3 லட்சம் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கம்பெனியின் வளர்ச்சி கடந்த 25 ஆண்டில் அசுரவேகத்தில் இருந்தது.

2000ம் ஆண்டில் ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் வெறும் ரூ.100 கோடி இருந்த நிலையில் தற்போது ரூ.4000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 1995ம் ஆண்டு இக்கம்பெனியின் சந்தை மதிப்பு ரூ.95 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது ரூ.4500 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024களின் மத்தியில் ரூ.6755 கோடி வரை சென்றது.

மனைவி கையில் ஒப்படைத்த நாயுடு

சந்திரபாபு நாயுடு 1994ம் ஆண்டு அரசியலில் நுழைந்தவுடன் புபனேஷ்பவரி ஹெரிட்டேஜ் ஃபுட்ஸைத் தனது கையில் எடுத்துக்கொண்டார்.

விவசாயிகளை மையமாக வைத்து இத்தொழிலை நாடு முழுவதும் விரிவுபடுத்திய புபனேஷ்வரி தனது கணவர் அரசியலில் இருந்தபோதிலும் தனது கம்பெனிக்கு எந்த வித அரசு சலுகை அல்லது ஒப்பந்தத்தை எதிர்பார்த்து செயல்பட்டது கிடையாது.

சந்திரபாபு நாயுடு எப்போதும் தனது சொத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கக்கூடியவர். 1994ம் ஆண்டு தனக்கு ரூ.9.99 கோடி சொத்து இருப்பதாகச் சொன்னவர் இன்றைக்கு ரூ.972 கோடி இருப்பதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஹெரிட்டேஜ் பூட்ஸ் சந்தை மதிப்பு வேகமாக உயர்ந்துள்ளது. 4 முறை ஆந்திராவில் முதல்வராக இருந்துள்ள சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக்காலத்தில்தான் ஹைதாராபாத் நகரத்தை தகவல் தொழில் நுட்ப நகரமாக மாற்றினார். இப்போது அந்திராவில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

VCK: "தமிழர் என்பதால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமா?" - என்ன சொல்கிறார் திருமா?

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.கிட்டத்தட்ட மூன்று வாரங்களா... மேலும் பார்க்க

TVK: "விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால்" - பிரேமலதா பளீச் பதில்

மதுரையில் நடந்த தவெக 2வது மாநில மாநாட்டில் விஜயகாந்த் குறித்துப் பேசியிருக்கும் விஜய், "எம்ஜிஆரைப் போல் குணம் படைத்த எனது அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவரும... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய மோசடி: கர்நாடக காங்கிரஸ் MLA கைது; ரூ.12 கோடி, தங்கம் பறிமுதல்! - அமலாக்கத்துறை

காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா கைதுபல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத பந்தய மோசடி நடப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 22 , 23 ஆகிய தேதிகளில் சிக்கிம், கர்நா... மேலும் பார்க்க