செய்திகள் :

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 7ஆக உயர்வு

post image

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மோதியது. இதில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சனிக்கிழமை போலீஸழர் தெரிவித்தனர். தீ வேகமாக பரவியதால் அருகிலுள்ள சுமார் 15 கடைகள் மற்றும் 4 முதல் 5 வீடுகள் தீக்கிரையாகின. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்து பஞ்சாப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதனிடையே டேங்கர் லாரி விபத்தி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் முதல்வர் பகவந்த் மான் சனிக்கிழமை அறிவித்தார்.

The death toll in the LPG tanker explosion and fire in Mandiala village in Hoshiarpur district of Punjab rose to seven on Sunday, as four victims succumbed to burn injuries, police said.

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க