மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
உள்நாட்டில் தயாரான வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!
ஒடிசாவில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், எதிரிகளின் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல அடுக்கு அமைப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.