செய்திகள் :

வாக்குத் திருட்டு: ராகுல், தேஜஸ்வி இருசக்கர வாகனப் பேரணி!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டனர்.

நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று(ஆக. 24) 8வது நாளை எட்டியுள்ளது.

இதனிடையே, வாக்குத் திருட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக, இன்று கத்திஹாரில் உள்ள மக்கானா விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார் ராகுல் காந்தி. விவசாயிகளுடன் தாமரை குளத்தில் இறங்கியும் அங்கு மக்கானா பயிர் நடவு செய்வதை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த நடைப்பயணமானது ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

இதையும் படிக்க: ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

Rahul and Tejashwi participated in a voting rights rally on a two-wheeler.

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க