மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
உ.பி.யில் போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறியப்பட்டது.
காவல்துறை மற்றும் மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இணைந்து நடத்திய சோதனையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து அங்கிருந்து பெருமளவு போலி உரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் போலி பேக்கிங் பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அதிகாரி விகாஸ் கிஷோர் சர்மா கூறுகையில், ரோசா காவல் நிலையத்திற்குட்பட்ட லோதிப்பூர் என்ற இடத்தில் உள்ள குடோனில் சனிக்கிழமை மாலை சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில், பெருமளவு போலி யூரியா மற்றும் ஜிங்க் உரங்கள் கைப்பற்றப்பட்டன.
உள்நாட்டில் தயாரான வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!
அத்துடன், 639 மூட்டை போலி டிஏபி உரங்கள், 453 மூட்டை இயற்கை உரங்கள் மற்றும் மூட்டைகளை பேக் செய்யும் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
போலி உரங்கள் விவசாயிகளின் விளைச்சலையும், மண்ணின் வளத்தையும் பாதிக்கும். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போலி உரங்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள கடைகள் மற்றும் வியாபாரிகளை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது என்றார்.