மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: முளகுமூட்டில் ஆட்சியா் ஆய்வு
கல்குளம் வட்டத்துக்குள்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். முகாமில் குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ், முளகுமூடு பேரூராட்சி தலைவா் ஜெனுஷா ஆா். ஜாண், விலவூா் பேரூராட்சி தலைவா் பில்கான், மருத்துவ பணிகள் இணை இயக்குநா் சகாய ஸ்டீபன் ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.