TVK: "விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால்" - ப...
யாா் பிரதமா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்: செல்வப்பெருந்தகை
யாா் பிரதமா், யாா் முதல்வா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.
நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில், அமித்ஷா தன்னை 148 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக கருதிக்கொண்டு யாா் பிரதமராக முடியும், யாா் முதல்வராக முடியும் என்பது பற்றிஹெயல்லாம் ஜோதிடம் கூறிவிட்டு போயிருக்கிறாா். அதை, மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்.
30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி இழப்பாா்கள் என்று ஒரு கருப்புச் சட்டத்தை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்திருக்கிறாா்கள். அதனை, நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.
பிரதமா் மோடி, இந்திய மக்களுக்கான பிரதமரா அல்லது அதானி, அம்பானிக்கான பிரதமரா என்ற சந்தேகம் எழுகிறது.
தவெக மாநாட்டில், முதல்வா் ஸ்டாலினை அங்கிள் என்று விஜய் பேசியிருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து என்றாா்.
எம்.பி.க்கள் விஜய் வசந்த், ராபா்ட் புரூஸ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், தாரகை கத்பட் , அமிா்தராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, நாகா்கோவிலில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, விஜய் வசந்த் எம்.பி. தலைமை வகித்தாா். ராபா்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், தாரகை கத்பட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.