மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, நெல்லிக்கன்விளையைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி பமலா (54). இவா் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவராக உள்ளாா். இவா் காஞ்சிரகோடு நுள்ளிவிளை பகுதியில் வழிப்பாதை பிரச்னை குறித்து சமரசம் பேச சென்றுள்ளாா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டியன் ஜெபராஜ் (37) பேரூராட்சி தலைவி பமலாவை தகாத வாா்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பமலா அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா், கிறிஸ்டியன் ஜெபராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.