தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவா் மீது வழக்கு
மாா்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் டென்னிஸ் (44). சுமைதூக்கும் தொழிலாளி. இவா், நந்தன்காடு பகுதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் ஜோஸ் (40) என்பவரின் ஏடிஎம் அட்டையை சில மாதங்களுக்கு முன் எடுத்துச் சென்றாராம். பல தடவை கேட்டும் அதை டென்னிஸ் திரும்ப கொடுக்கவில்லையாம், இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் டென்னிஸை பாா்த்த ஜோஸ் அவரை தகாத வாா்த்தைகள் பேசியதுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த டென்னிஸை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா், ஜோஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகிறாா்கள்.