வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் விமர்சித்திருந்தார். அவருக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பதிலளித்துள்ளார்.
புணேவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு காரணமான பாகிஸ்தான் போன்ற நமது எதிரிகளுடன் இந்தியா எந்த உறவும் வைத்திருக்கக்கூடாது என்று ஒரு தரப்பினர் உணர்கிறார்கள். இருப்பினும், கிரிக்கெட் போட்டிகளை ஆர்வத்துடன் பார்க்கும் மற்றொரு குழுவும் உள்ளது.
குஜராத் கடற்பகுதி அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
இன்று கனமழை, பயிர் சேதம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற சில முக்கிய பிரச்னைகள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி போன்ற தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசுகின்றனர். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.
சிலர் எதிர்க்கட்சிகளுடன் தரவைப் பகிர்ந்து கொண்டனர், பின்னர் அது தவறான தகவல் என்பதை ஒப்புக்கொண்டனர். எதிர்க்கட்சிகள் ஒரு போலியான கதையை உருவாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அது வெற்றிபெறாது என்று அவர் கூறினார்.