செய்திகள் :

Soubin Shahir: "சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டது" - Coolie குறித்து நெகிழும் செளபின்

post image

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் 'கூலி' திரைப்படம் வெளியாகியிருந்தது.

Coolie Team - Soubin Shahir
Coolie Team - Soubin Shahir

தமிழ் சினிமா பிரபலங்களைத் தாண்டி மலையாளத்திலிருந்து செளபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா, தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, இந்தியிலிருந்து ஆமிர் கான் எனப் பான் இந்திய நட்சத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி திரைக்கு வந்திருந்தது.

செளபின் ஷாஹிர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான்.

'கூலி' திரைப்படம் அவருக்கு எப்படியான ஒரு வாய்ப்பு என அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசிய விஷயங்களை நாம் கேட்டிருப்போம்.

தற்போது ரஜினிகாந்த், ஆமிர் கான், உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் எனப் பிரபலங்கள் பலருடனும் 'கூலி' படப்பிடிப்புத் தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி.

தயாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் கதாபாத்திரம். 'கூலி' எப்போதும் என் இதயத்துக்கு மிக நெருக்கமான திரைப்படமாக என்றும் இருக்கும். அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் செளபின் ஷாஹிர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

One Year Of Vaazhai: "மாரி சார் என்னை +2 முடிச்சதும் சென்னை வர சொல்லியிருக்கார்” - பொன்வேல் பேட்டி

பசியின் குரூரத்தையும் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் வறுமையின் கொடூரத்தையும் பெருவலியோடு பிரதிபலித்து இதயம் கனக்க வைத்தது, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை'. Vaazhai பார்வையாளர்களின் உணர்வ... மேலும் பார்க்க

Manjima Mohan: "உடல் எடையைக் குறைக்க சர்ஜரிகூட செய்ய நினைத்தேன்; ஆனால்" - மஞ்சிமா மோகன் ஓப்பன் டாக்

மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன். தமிழில் கௌதம் மேனன் இயக்கிய 'அச... மேலும் பார்க்க

Rajinikanth: ``அழகான தருணம்" - ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம், ஆகஸ... மேலும் பார்க்க

Indra Review: உளவியல் கோணத்துடன் மிரட்டும் சீரியல் கில்லர் கதை; ஐடியா ஓகே, திரைக்கதை?!

சென்னையில் அபி (சுனில்) தொடர் கொலைகள் செய்கிறார். கொலைகளைச் செய்து விட்டு சடலத்திலிருந்து வலது கை மணிக்கட்டை வெட்டி எடுக்கிறார். மறுபுறம், மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

What to watch - Theatre & OTT: இந்திரா, கேப்டன் பிரபாகரன், Nobody 2, தலைவன் தலைவி

இந்திரா (தமிழ்)இந்திராசபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன், அனிஹா, சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்திரா'. சீரியல் கில்லர் பற்றிய விருவிருப்பான காவல் ... மேலும் பார்க்க