2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
கடைசியாக விளையாடிய 24 ஒருநாள் போட்டிகளில் செய்யாத ஒன்றினை இந்தப் போட்டியில் நிகழ்த்தியுள்ளது.
தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் முதல்முறையாக 100-க்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள்.
கடைசிய ஒருநாள் உலகக் கோப்பை 2023-இல் நியூசிலாந்திற்கு எதிராக ஆஸி. அணி தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் 175-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆஸி. அணி 19 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் குவித்துள்ளது.
டிராவிஸ் ஹெட் 86, மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.