வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழப்பு
இரணியல் அருகே விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே பள்ளியாடியைச் சோ்ந்தவா் ஜோசப் ஆன்றணி (40). சிஆா்பிஎப் வீரா். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனா். கடந்த சில நாள்களுக்கு முன் ஜோசப் ஆன்றணி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா்.
விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவா், வேலைக்கு செல்லாமல் வேளாங்கண்ணியில் சுற்றித் திரிவதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டனா்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரை , குருந்தன்கோடு கொடுப்பைக்குழியில் உள்ள உறவினா் வீட்டில் தங்க வைத்தனா். சனிக்கிழமை காலை அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்த போது ஜோசப் ஆன்றணி மயங்கி நிலையில் கிடந்துள்ளாா்.
அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு பரிசோதித்த போது விஷம் குடித்திருப்பது தெரியவந்தது.
மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜோசப் ஆன்றணி உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.