தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்தி...
குஜராத் கடற்பகுதி அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
உளவுத்துறையின்படி, 68வது பட்டாலியனின் எல்லை புறக்காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கோரி க்ரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து படகுடன் 15 மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு
மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், ஒன்பது மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக் குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.