செய்திகள் :

சரியான புரமோஷன் இல்லை... புலம்பும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

post image

மதராஸி திரைப்படத்திற்குத் தயாரிப்பு நிறுவனம் சரியான புரமோஷன்களை மேற்கொள்ளவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அமரன் படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படமென்பதால் அவரின் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

ஆனால், மதராஸியின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் சரியான புரமோஷன்களை செய்யாததால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் எழவில்லை.

அமரனை வைத்து மதராஸியின் வெளியீட்டு உரிமத்தை அதிக தொகைக்கு விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகவும் அவ்வளவு தொகை கொடுத்து வாங்க எந்த விநியோகிஸ்தரும் தயாராக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது. அதற்கு ரசிகர்களிடம் பெரிய ஆவல் இல்லாததற்கு புரமோஷன்களே காரணம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆதங்கத்தைக் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க: ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

sivakarthikeyan's madharasi movie has been dissapointed promotions

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் போஸ்டரை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எ... மேலும் பார்க்க

தலைவன் தலைவி வசூல் எவ்வளவு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரை... மேலும் பார்க்க

பிருத்விராஜின் புதிய படம்!

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிஃபர், ப்ரோ டாட... மேலும் பார்க்க

விஷால் - 35 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது பட... மேலும் பார்க்க

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

கூலி திரைப்படத்தின் அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாகிர் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ர... மேலும் பார்க்க

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: பட்டம் வெல்லும் முனைப்பில் சின்கராஸ்

நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் அதிகாரபூா்வ சுற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இது 145-ஆவது யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயமாகும். நடப்பு சாம்பியன் ஜேனிக் சின்னா், இரண்டாம் ... மேலும் பார்க்க