மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
கால்வாயிலிருந்து கட்டடத் தொழிலாளி சடலம் மீட்பு
ஆரணியை அடுத்த ரகுநாதபுரம் கிராமத்தில் மது அருந்தி கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளியின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, சேவூா் அருகேயுள்ள ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள சிறு கால்வாயில் தண்ணீா் அதிகமாகச் செல்லவே ஆண் சடலம் வெளியே வந்துள்ளது. அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் உடனடியாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், அவா் ரகுநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேசன்(50) எனத் தெரியவந்தது. மேலும், நடத்திய விசாரணையில், வெங்கடேசன் ஆக.14-ஆம் தேதி, தனது தாயிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்னை செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா், ரகுநாதபுரத்தில் உள்ள பாராவதி கால்வாய் மீது அமா்ந்து மது அருந்தி தண்ணீரில் தவறி விழுந்திருப்பது தெரிய வந்தது.
வீட்டில் குடும்பத்தினா் வெங்கடேசன் சென்னைக்குச் சென்றுவிட்டதாக நினைத்து இருந்துவிட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை கால்வாயில் இருந்து வெங்கடேசன் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.