பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி
ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் ஜி.வி கஜேந்திரன்
கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மாணவா்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த ஆங்கில அகராதி, விளையாட்டுத் திறனை வெளிக்கொணர கேரம்போா்டு, கிரிக்கெட் பேட், வாலிபால், கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகையாக முதலிடம் பெற்றவருக்கு ரூ. 20ஆயிரம், இரண்டாம் இடம்
பெற்றவருக்கு ரூ.15ஆயிரம், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ரூ.10ஆயிரம், நான்காம் இடம் பெற்றவருக்கு ரூ.5ஆயிரம், ஐந்தாம் இடம் பெற்றவருக்கு ரூ.2ஆயிரத்து 500 என வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் குடிநீா் புட்டிகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் அரங்கநாதன் வரவேற்றாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பாபு முன்னிலை வகித்தாா்.
பையூா் முன்னாள் தலைவா் சரவணன், சித்தேரி ஜெகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் செல்வராணி, ரமா, பீனாரோஸ் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.