TVK: ``கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' - விஜய்...
Trump 50% Tariff: ``அமைதியாக இருந்தால் கொடுமை அதிகரிக்கும்'' - இந்தியா உடன் கைகோர்க்கும் சீனா!
இந்தியா மீது இந்த மாதத்தின் தொடக்கத்தில் 25 சதவிகிதம் தான் வரி போட்டது அமெரிக்கா.
அடுத்ததாக, இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று 50 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டது.
சீனாவிற்கு 'அதிக' வரி இல்லை!
ஆனால், ரஷ்யா உடன் அதிகம் வணிகம் செய்யும் நாடான சீனா மீது இப்படி எந்த அதிக வரியும் விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு போடப்பட்ட 30 சதவிகித வரியே நவம்பர் மாதம் வரை அமலில் இருக்கும்.
இதற்கு அமெரிக்கா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பது தான் முக்கிய காரணம்.

சீனாவின் நிலைப்பாடு
இந்த நிலையில், இந்தியாவிற்கான ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது சீனா.
இது குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சு ஃபெய்ஹோங் இந்தியா - சீனா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் அந்தப் பேச்சில், "அமெரிக்கா இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது. மேலும், வரி விதிப்பதாகவும் மிரட்டுகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
அமைதி இந்தக் கொடுமைகளை இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். இந்தியா உடன் சீனா நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீதான இந்த நடவடிக்கைக்கு ட்ரம்பிற்கு ஏற்கெனவே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்தச் சூழலில் சீனாவும் இந்தியாவை ஆதரித்துள்ளது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...