செய்திகள் :

சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது.

துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், ராஜா அண்ணாமலைபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடையாரில் 9 செ.மீ., ஈஞ்சம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணையில் தலா 8 செ.மீ., நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் தலா 6.7 செ.மீ. மற்றும் வேளச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை
மழை

சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி, ``நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் 50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பெய்திருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்." எனத் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் பெய்த இந்த திடீர் கனமழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

மும்பை கனமழை: முடங்கிய புறநகர் ரயில் சேவை; அமிதாப்பச்சன் பங்களாவில் புகுந்த மழை வெள்ளம்

மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே த... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை; சாலைகளைச் சூழ்ந்த வெள்ளம்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை இன்று காலையில் மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் நகரில் பல சாலைகள் வெள்ளத்தி... மேலும் பார்க்க

Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை" - அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

வருகிற 18-ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகவே சென்னை... மேலும் பார்க்க

Mumbai Rain: விமானம், வாகன போக்குவரத்து பாதிப்பு; நிலச்சரிவால் இருவர் பலி; கனமழையிலும் நடந்த உறியடி

மும்பையில் நேற்று தொடங்கிக் கன மழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முடங்கி இருக்கிறது. காந்தி நகர், கிங்சர்க்கிள், சயான், குர்லா, செம்பூர், அந்தேர... மேலும் பார்க்க

Rain Alert: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்; 7 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ரிப்போர்ட்

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதலே தமிழத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்க... மேலும் பார்க்க

Nilgiri: ரெட் அலெர்ட்; பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத்தலங்கள் மூடல்; அவசரகால எண்கள் வெளியீடு

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக மழை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வரு... மேலும் பார்க்க