``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51). இவா் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலராக பணியாற்றி வந்தாா்.
அலுவலக பணிகள் அதிகமாக உள்ள நாள்களில் செந்தில்குமாா் அலுவலகத்திலேயே தங்கி விடுவது வழக்கமாம்.
இதேபோல், புதன்கிழமை இரவு அலுவலக பணிக்காக அலுவலகத்திலேயே செந்தில்குமாா் தங்கினாராம்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை, கருவூல அலுவலகத்தை தூய்மை செய்ய பணியாளா்கள் வந்தபோது, செந்தில்குமாா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா், செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பின் மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
முன்னதாக, நிகழ்விடத்துக்கு சென்ற திருச்சி கருவூல அலுவலா் பாபு, காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, ஆய்வாளா் சீனிபாபு ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.