செய்திகள் :

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: நெல்லையில் பலத்த பாதுகாப்பு

post image

திருநெல்வேலியில் நடைபெறும் 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை(ஆக.22) தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அவர் வருகையையொட்டி, நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வடமாநிலங்களில் கொடிகட்டி பறக்கும் பாஜக, இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தமிழத்தில் கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பாஜகவின் தமிழகத் தலைவரான நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை உள்ளடக்கிய மண்டல வாரியான மாநாடுகளை அறிவித்தார்.

அதன்படி, பாஜக சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை(ஆக. 22) தச்சநல்லூரில் நடைபெற உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்ற உள்ளனா்.

அமித் ஷா வருகை

இந்நிலையில், கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித் ஷா, பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தடையும் அமித் ஷா, வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.

தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும் மாநாட்டில் அமித்ஷா பேசுகிறார். இந்த மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நகர்வுகள், தேர்தலுக்கு தயாராவது, கூட்டணிகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா வருகையையொட்டி, மேடை, நிா்வாகிகள் அமரும் இடம், தொண்டா்கள் அமரும் இடம் உள்ளிட்டவற்றில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி நெல்லை நகரப் பகுதிக்குள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,

நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. நெல்லை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

Union Home Minister Amit Shah is arriving in Tamil Nadu on Friday (August 22) to participate in the Booth Committee Incharges Conference for 28 Assembly Constituencies across 5 districts to be held in Tirunelveli.

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின... மேலும் பார்க்க

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதிய... மேலும் பார்க்க

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு இருந்தால், அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆ... மேலும் பார்க்க

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.386-ஆவது சென்னை நாளையொட்டி, முதல்வர் மு... மேலும் பார்க்க

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

சென்னை: தனியாா் நிறுவனத்தின் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனாா் தெருவை சோ்ந்தவா் பிரபு(41). இவா் அரும்ப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: 2 பாா்வையாளா்கள் நியமனம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் பாா்வையாளா்களாக, மத்திய அரசின் கூடுதல் செயலா்கள் இருவா் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா். அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களின்கீழ், மத்திய பஞ்சாயத்து ராஜ் த... மேலும் பார்க்க