டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சீன அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டிரம்ப் வரி விதிப்புக்கு எதிராக, இந்தியா - சீனா இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்திருக்கிறது. மேலும் வரி விதிக்கப்போவதாகவும் மிரட்டுகிறது. இதனை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அமைதியாக இருப்பது, கொடுமைக்காரர்களுக்கு பலம் சேர்க்கும். எனவே, சீனா, இந்தியாவின் பக்கம் நிற்கும் என்று, நியாயத்துக்கு விரோதமான வரி விதிப்பு முறைகளை எதிர்ப்பதாக சீனா அறிவித்துள்ளது.