செய்திகள் :

அனுபமாவின் பரதா படத்திற்கு சாய் பல்லவி வாழ்த்து..! தொடரும் பிரேமம்!

post image

நடிகை சாய் பல்லவி அனுபமாவின் பரதா படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது.

இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

பெண்களின் மீதான அடக்குமுறை குறித்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஆனந்த மீடியா தயாரிப்பில் இந்தப் படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியதாவது:

உன்னுடைய (அனுபமா) மிகப்பெரிய நாளில் நான் எனது காதலையும் இறுக்கமான அணைப்பையும் அனுப்புகிறேன். எனது அருமையானவளே, உனக்கு எல்லாமும் நல்லதாகவே நடக்க வேண்டும்.

பரதா படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். படக்குழுவுக்கு எனது நெஞ்சார்த்த வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

பிரேமம் படத்தில் தொடர்ந்த இவர்களது நட்பு இன்றளவும் தொடர்கிறது. சாய் பல்லவி மிகப்பெரிய நடிகையாக வளர்ந்துவிட்ட நிலையில், அனுபமா நாயகியாக நடிக்கும் இந்தப் படம் சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Sai Pallavi insta story
சாய் பல்லவியின் பதிவு.

Actress Sai Pallavi has expressed her congratulations for Anupama's film Bharatha.

ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்..! தனக்குத்தானே போட்டியாக மாறிய பிரதீப்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு இவரது டூட், எல்ஐகே ஆகிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கியவர் பிரதீப்... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!

நடிகர் டாம் சாக்கோ நடிப்பில் உருவாகியுள்ள சூத்ரவாக்யம் என்ற மலையாள திரில்லர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகை வின்சி அலோசியஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓடிடி வ... மேலும் பார்க்க

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 22 - 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)தொழிலில் புதிய... மேலும் பார்க்க

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று (ஆக.22) மறுவெளியீடாகியுள்ளது. இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம... மேலும் பார்க்க

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவான இந்திரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு கொலையின்போதும் கொல்லப்பட்டர்களின் மணிக்கட்டு பகுதி துண்டிக்கப... மேலும் பார்க்க