செய்திகள் :

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக: நயினார் நாகேந்திரன்

post image

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி இன்று மாலை 6 மணி அளவில் தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொள்கிறார். இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாநாட்டு திடலில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாரதி ஜனதா கட்சி இந்தியா முழுவதும் 1652 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் எங்க தலைவர் நரேந்திர மோடி. உலகத்திலே மிகப்பெரிய கட்சி எங்கள் கட்சிதான். நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து உள்ளார்.

ஆனால் அவர் இரண்டு மாநாடு நடத்திவிட்டு எங்கள் எதிரி கட்சி பாரதிய ஜனதா என்று கூறுவதை நான் எப்படி பார்க்கிறேன் என்பதை விட நீங்கள் பத்திரிகையாளர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் எந்தவித ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணி அடிமை கூட்டணி என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு, எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது.

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

அப்படி எனக்கு யாராவது கூறி தெரிய வந்தால் அதற்குரிய தக்க பதிலடி தரப்படும். அதிமுக, பாரதிய ஜனதா பொருந்தாத கூட்டணியா என்ற கேள்விக்கும், எந்த ஒரு கொள்கைப் பிடிப்பும் இல்லாத கட்சியை ஆரம்பித்து விட்டு அவர் எங்கள் கூட்டணி பற்றி எந்த நியாயத்தின் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. கதைகள் எல்லாரும் கூறுகிறார்கள், தமிழக மக்கள் எல்லோருடைய கதைகளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

BJP leader Nainar Nagendran stated that TVK is a party with no ideology.

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவ... மேலும் பார்க்க

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

நெல்லை: திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சா... மேலும் பார்க்க

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது கடமை: அண்ணாமலை

நெல்லை: தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களின் கடமை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.அமித் ஷா தலைமையில் நெல்லையில் பாஜக பூ... மேலும் பார்க்க

தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்... மேலும் பார்க்க

தனி ஆள் அல்ல, கடல் நான்... விஜய் பகிர்ந்த செல்ஃபி விடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்றைய (ஆக.21) மாநாட்டில் எடுத்த செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார். மதுரை பாரபத்தியில் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டி... மேலும் பார்க்க