Chennai Day: நூற்றாண்டைக் கடந்து நிற்கும் சென்னையின் மணிக்கூண்டுகள்! | Photo Alb...
TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் செல்ஃபி ஒன்றை எடுத்திருந்தார். அந்த வீடியோவுடன், பதிவு ஒன்றையும் விஜய் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான்" என்று பதிவிட்டிருக்கிறார்.