Sasikala: சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறு? திமுக நிர்வாகி மீது புகார்; பின்...
'பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை'- பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?
நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். மேலும் பாஜக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, " எதைப் பார்த்தாலும் முதல்வர் பயப்படுகிறார். அடுத்த எட்டு மாதங்கள் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்கையும் சேகரியுங்கள். பெரிய மாற்றத்திற்கு நீங்கள் பாடுபட வேண்டும். 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை" என்று கூறியிருக்கிறார்.