ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!
திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வியாழக்கிழமை மாலை திரிபுரேஸ்வரி கோயிலுக்குச் சென்றார். பிறகு, சிறுமியை காரில் உதய்பூர் ரயில் நிலையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். வழியில், ஓடும் காரில் சிறுமியுடன் வந்த இருவரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மூவரும் இரவு 10 மணியளவில் திரும்பி வந்தபோது உதய்பூர் துணைப்பிரிவில் உள்ள கக்ராபன் சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை கூறியுள்ளார். பின்னர் அவர்கள் விசாரணைக்காக ஆர்.கே. பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!
வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரை தடயவியல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.