'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெ...
வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை
வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் தகராறு முற்றவே ஆதர்ஷ் தனது இரண்டு கூட்டாளிகளுடன் இணைந்து பிரவீனை செங்கல் மற்றும் கம்பியால் தாக்கியுள்ளார்.
பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்த தாக்குதலில் பிரவீன் படுகாயமடைந்தார். உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பலியான பிரவீன் வாரணாசியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இதுதொடர்பாக பிரவீனின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.