TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்...
தாக்குதல் சம்பவம்: முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!
தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் முதல்முறையாக காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
காந்தி நகர் மொத்த விற்பனை சந்தையின் ஆடை கண்காட்சியான வஸ்த்ரிகாவின் தொடக்க நிகழ்வில் முதல்வர் ரேகா குப்தா உரையாற்றினார்.
உள்ளூர் எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லியை யமுனா பார் விகாஸ் வாரியத்தின் தலைவராக அவர் அறிவித்தார். அவர் தில்லி அரசில் உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் காந்தி நகரின் முதல்வரைப் போன்றவர். தில்லியின் வளர்ச்சிக்காக அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். யமுனா பார் விகாஸ் வாரியத்தின் தலைவராக லவ்லி இருப்பார் என்று அவர் கூறினார்.
லவ்லி, கிழக்கு தில்லி எம்.பி. மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டுக்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், மக்களின் குறைகளைக் கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில், தலை மற்றும் கன்னத்தில் காயத்துடன் முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.