1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!
ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது.
குறிப்பாக குட்டி ஸ்டீவ் ஸ்மித் எனப்படும் மார்னஸ் லபுஷேன் தனது மோசமான ஃபார்மிலே இன்னும் தொடர்வது ஆஸி.க்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மார்னஸ் லபுஷேன் 1 ரன்னில் இங்கிடி ஓவரில் ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியிலும் லபுஷேன் 1 ரன்னில் மகாராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட்டும் தொடர்ச்சியாக சரியாக ஆடாதது ஆஸி. அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற 278 ரன்கள் தேவையான நிலையில், ஆஸி. அணி 25 ஓவர்களில் 121/4 ரன்கள் எடுத்துள்ளது.