ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த கேசவ் மகாராஜ்..! குல்தீப் பின்னடைவு!
ஐசிசி தரவரிசையின் புதிய பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
கேசவ் மகாராஜ் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்
1. கேசவ் மகாராஜ் - 687 புள்ளிகள்
2. மஹுஷா தீக்சனா - 671 புள்ளிகள்
3. குல்தீப் யாதவ் - 650 புள்ளிகள்
4. பெர்னார்டு ஸ்கால்ட்ஜ் - 644 புள்ளிகள்
5. ரஷீத் கான் - 640 புள்ளிகள்