செய்திகள் :

Suriya: அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? - தலைமை நற்பணி இயக்கம் சொல்வதென்ன?

post image

நடிகர் சூர்யாவின் 'அகரம்' அறக்கட்டளை தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி, சமீபத்தில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தியிருந்தார்.

'அகரம்' அறக்கட்டளை மூலமாகப் பயனடைந்த மாணவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகிழ்வுடன் பேசியிருந்தனர்.

Suriya
Suriya

அந்த நிகழ்வின் காணொளிகள் பலவும் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக வைரலானதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா கூடிய விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்று தகவல்களைப் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

அந்தத் தகவல்களையெல்லாம் மறுத்து, நடிகர் சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று, சமூக வலைதளங்களை மையமாக வைத்து, இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான, போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கொள்கைகளுக்கு முரணானது.

Suriya Fans Club Clarification
Suriya Fans Club Clarification

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளன.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு, தமிழ்நாடு மட்டுமின்றி உலகளாவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமானவர்களாகிய உங்களுக்கு, எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துகளோடு, சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான இந்தப் போலியான செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

`கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் விஜயகாந்த் மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்தார்' -ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது. இப்படத்துக்குப்... மேலும் பார்க்க

Raghava Lawrence: 'ரூ.15 லட்சம் நன்கொடை' - லாரன்ஸும் பாலாவும் சேர்ந்து செய்த உதவி

நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலமாக பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த ஆண்டு 'மாற்றம்' என்கிற புதிய அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலமாகவும் பல்வேறு உதவிகளைச் செ... மேலும் பார்க்க

Coolie: `திருத்தங்களை மேற்கொள்ள மறுத்ததன் பிறகே 'A' சான்றிதழ்’ - CBFC வழக்கறிஞர் வாதம்

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் எம். ஜோதிபாசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை 29 திரைப்படங்கள் தயாரிக்கப்... மேலும் பார்க்க

கேப்டன் பிரபாகரன்: 'இந்த நோய்தான் தமிழ் சினிமாவை கெடுத்துக் கொண்டிருக்கிறது'- ஆர்.கே. செல்வமணி

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100வது திரைப்படமான இத்திரைப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்துக்குப் ப... மேலும் பார்க்க

Anupama: ``அந்த நிராகரிப்பை என்னால் மறக்க முடியாது" - பகிரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் 'பைசன்' படத்தில் நடித்திருக்கிறார். தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்தும் ... மேலும் பார்க்க