செய்திகள் :

கேப்டன் பிரபாகரன்: 'இந்த நோய்தான் தமிழ் சினிமாவை கெடுத்துக் கொண்டிருக்கிறது'- ஆர்.கே. செல்வமணி

post image

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’.

விஜயகாந்தின் 100வது திரைப்படமான இத்திரைப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இப்படத்துக்குப் பிறகே 'கேப்டன் விஜயகாந்த்' என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

Captain Prabhakaran Re- Release - RK Selvamani
Captain Prabhakaran Re- Release - RK Selvamani

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்.கே செல்வமணி பேசியிருக்கிறார்.

“ஒருவர் ரூ.100 கோடி சம்பளம் வாங்கினால் உடனே எனக்கு ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என்று நினைப்பது, அந்த படம் ரூ.1000 கோடி வசூலித்து விட்டதென்றால் உடனே என் படமும் ரூ.1000 கோடி வசூலிக்க வேண்டும் என்று நினைப்பது. இந்த நோய்தான் தற்போது தமிழ் சினிமாவைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

என் படம் ஓடவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் அந்த படத்தைத் தாண்டி ஓடவேண்டும் என்று நினைப்பது சரியான போட்டியல்ல. ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூல் செய்வது வேறு.

ஆர். கே. செல்வமணி
ஆர். கே. செல்வமணி

ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூல் செய்வதால் அது நல்ல படம் ஆகிவிடாது. ‘கேப்டன் பிரபாகரன்’ அப்போது வெளியானபோது வெறும் 90 திரைகளில்தான் வெளியானது. ஆனால் இப்போது 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Anupama: ``அந்த நிராகரிப்பை என்னால் மறக்க முடியாது" - பகிரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் 'பைசன்' படத்தில் நடித்திருக்கிறார். தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்தும் ... மேலும் பார்க்க

``பரியேறும் பெருமாள் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; ஆனால்" - மனம் திறந்த நடிகை அனுபமா

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'பைசன்'. கபடியை மையப்படுத்திய இப்படத்தில் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலம்: ``எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது" - பிரகாஷ்ராஜ்

தனுஷின் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மெனேன் உள்ளிட்ட பலர் அந்தப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்... மேலும் பார்க்க