செய்திகள் :

`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’ - ஆச்சர்ய பின்னணி

post image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

Pearl இந்த ஆண்டு மே மாதத்தில் 14 ஆண்டுகள் 69 நாட்கள் நிறைவுற்ற நிலையில், "உலகின் மிக வயதான கோழி" என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றது.

டெக்சாஸில் வசிக்கும் சொன்யா ஹல் என்பவரின் வீட்டில், பெர்ல் (Pearl) உட்பட பல கோழிக்குஞ்சுகள் உள்ளன.

கோழி - மாதிரி படம்
கோழி - மாதிரி படம்

இருக்கும் கோழிகளிலேயே பெர்ல் தான் மிகச் சிறியது எனவும், பிற கோழிகள் எப்போதும் அதைத் துன்புறுத்தியதாகவும் உரிமையாளர் கூறுகிறார்.

பெர்ல் வயதான பிறகு குடும்பத்தினர் அதைக் கூண்டிலில்லாமல் வீட்டுக்குள் வைத்து பராமரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.

பெர்லின் வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தன

காலை எலும்பு முறிவு, அணில்கரடி தாக்குதல், சிக்கன் பாக்ஸ், மற்றும் வாதம் போன்ற பல்வேறு சவால்களை பெர்ல் கடந்து வாழ்ந்து வருகிறது.

"இத்தனை பிரச்னைகளையும் கடந்து, இன்னும் வாழ்ந்து வருவது ஆச்சரியம் தான்," என உரிமையாளர் சொன்யா ஹல் பெருமையுடன் தெரிவித்தார்.

பெர்ல் "ஈஸ்டர்-எக்கர் ஹென்" என்ற இனத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. இந்த இனத்தைச் சேர்ந்த கோழிகள், சராசரியாக 5 முதல் 8 ஆண்டுகள் தான் வாழுமாம். ஆனால் பெர்ல் அந்த எல்லையைத் தாண்டி வாழ்ந்து, உலக சாதனை படைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யூடியூபரின் இறப்புக்கு நீதிகேட்டு போராடும் மேற்கு ஆப்பிரிக்க நாடு - யார் இவர், என்ன காரணம்?

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினா ஃபாசோவை சேர்ந்த, அலினோ ஃபாசோ. ஜனவரி 2025-ல் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டு அபிஜான் நகரில் உள்ள ராண... மேலும் பார்க்க

புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

புனேயில் தென்னிந்திய உணவகம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு நூதனமான ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது. அறிவிப்புப் பலகைஅதில் உணவுகளின் விலைப்பட்டியலைக் குறிப்பிட்டு கடைசியில், சாப்பாட்டை வீணாக... மேலும் பார்க்க

Dog Bite: நாய் போல் கத்துவார்களா; அசைவம் சாப்பிடக்கூடாதா; தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்களா?

நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இ... மேலும் பார்க்க

'அதிகமா உதவறவுங்க 'அங்க'தான் இருக்காங்க'- டிரை சைக்கிளில் இந்தியப் பயணம் செய்த யூடியூபர்ஸ் பகிர்வு

மதுரையைச் சேர்ந்த சிராஜ், அருண் என்ற இரண்டு யூடியூபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகஇந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள்.கிட்டதட்ட 30,000 கி.மீ டிரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறி... மேலும் பார்க்க

``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழிலதிபர் விரக்தி ஏன்?

ரூ.12 கோடி இழந்த தொழிலதிபர் எத்தனையோ பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளனர். அப்படி இழந்தவர்களில் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். ஏராளமானோர் பண ஆசையில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விள... மேலும் பார்க்க

மும்பையில் தொடரும் கனமழை; சுரங்க சாலை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார்: நீந்தி உயிர் தப்பிய இருவர்

மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து இன்று காலை... மேலும் பார்க்க